இந்த கலந்துரையாடலானது நேற்று(3) காலை பதினொரு மணியளவில் புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்றது
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திருச்சபையை சார்ந்த பாஸ்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களையும் பிரச்சனைகளையும் சிவமோகன் எம்பியிடம் தெரிவித்தனர்
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக தெரிவித்த அவர்கள் குறிப்பாக தங்களது சமயம் சார்ந்த பாட ஆசிரியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நியமிக்கப்படவில்லை பிற மாவட்டங்களில் அவ்வாறான நிலை இல்லை என்று தெரிவித்தவர்கள் தங்களது திருச்சபையில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தொண்டர் ஆசிரியராக உள்வாங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்கள்
திருச்சபையினரிருடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த சிவமோகன் எம்பி நிதி ஒதுக்கீடுகளில் எம்முடன் தொடர்பில் உள்ள அனைத்து கிராமங்களின் அபிவிருத்திகள் ஆலயங்களின் கட்டுமானப்பணிகளுக்கு தேவையான நிதிகளை வவுனியா முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளோம் எதிர்வரும் காலங்களில் திருச்சபைகளுடன் நிரந்தர தொடர்புகளை பேணி அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அத்துடன் ஆசிரியர்கள் நியமனம் பற்றி மாகான கல்வி அமைச்சுடன் பேசிய பின் அதற்கான முடிவுகள் தரப்படும் என்று தெரிவித்தார்.