கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரி வினாயகமூர்த்தி
காரைதீவு நிருபர் சகா-கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்டகாலமாக அபிவிருத்தியில் பல குறைகளுடன் காணப்படும் கல்முனை தமிழ் பிரதேசத்தில் எனது வட்டாரத்தையும் தாண்டி அபிவிருத்திகளை முடிந்தளவு செய்துகொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் அபிவிருத்திகளை மேற்கொள்வேன். என கல்முனை மாநககரசபையில் அங்கம் வகிக்கும் ஐக்கியதேசியக்கட்சியின் உறுப்பினரான பாண்டிருப்பு ஆறாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திருமதி புவனேஸ்வரி விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கல்முனை மாநகரசபைக்கு நான் தெரிவாகி சுமார் ஒன்றரை வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது .ஆளும் கட்சியான ஐக்கியதேசிக்கட்சியை சேர்ந்தவள் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி என்னால் முடிந்த அபிவிருத்திகளை இப்பிரதேசத்திற்கு செய்துள்ளேன். பெயரளவில் நான் உறுப்பினராக இருந்துவிட்டு போகமாட்டேன் வாக்குகள் மட்டும் எனது குறிக்கோளல்ல .அதனாலேயே வட்டாரம் தாண்டியும் சேவை செய்கின்றேன்.
எனது கோரிக்கையை ஏற்று இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக செப்பனிடப்படாமல்ட இருந்த வீதிகளை வடிகான்களை மயானத்தை புனரமைத்து அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்பு வழங்கி நிதி ஒதுக்கீடுகள் செய்த ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்களக்கும் எனது நன்றியினை இப்பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
பின்வரும் அபிவிருத்திகளை குறிப்பிட காலத்தில் செய்துள்ளேன்
அமைச்சர் கபீர் காசிம் அவர்களால் வழங்கப்பட்ட மூன்று கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி அண்ணாமன்ற வீதி மாரியம்மன் கோவில் முன் வீதி செட்டியார் வீதி போன்றவை காபட் வீதியாக மாற்றி அமைக்கப்பட்டன. கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் வழங்கப்பட்ட எண்பத்தியாறு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாண்டிருப்பு கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டது.
பாண்டிருப்பு இந்து மயானத்தை புனரமைப்பதற்காக மனோகணேசன் அமைச்சர் வழங்கிய இருபத்தியொன்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மின்குமிழ்கள் மயானம் நடுவே ஒரு நடைபாதையும் இ வடிகானும் புனரமைக்கப்பட்டது. பிரதமர் அவர்களால் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு செல்லப்பர் தோட்ட வீதி புனரமைக்கப்பட்டது. மனோ கணேசன் அவர்களால் வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு மேட்டுவட்டை கிராமத்தில் இரு வீதிகள் புனரமைக்கப்பட்டது.
கௌரவ பிரதமரினால் வழங்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெரியநீலாவணை செல்லத்தரை நான்காம் குறுக்கு வீதி புனரமைக்கப்படுகின்றது. பொருளாதார அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கான மின்விளக்குகள்(டுநுனு)எமது கிராமத்திற்கு பொருத்தப்படவுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஹரீஸினால் ஒதுக்கப்பட்ட கம்பரலிய திடத்தின் மூலம் பெறப்பட்ட பத்து இலட்சம் நிதியில் கல்முனை உடையார் இரண்டாம் குறுக்கு வீதி புனரமைக்கபட்டது.
பாண்டிருப்பு காளி கோவில் வீதி சேனைக்குடியிருப்பு மாரியம்மன் கோவில் போன்றவற்றையும் காபட் வீதியாக மாற்றி அமைக்க அனுமதி பெறப்பட்டு அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கௌரவ அமைச்சர் கபீர் காசிம் அவர்கள் வழங்கிய அறுபது இலட்சம் ரூபா நிதியின் ஊடாக பாண்டிருப்பில் ஆறு வீதிகள் புனரமைக்கப்படடன.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு முன்பாக வீதி சமிக்கை விளக்கு பொருத்துவதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்கான பணிகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.