இன்று கல்முனையில் முருகேசு அறக்கட்டளை நிதியம் உதயம்:

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரனின் ஏற்பாடு!
காரைதீவு நிருபர் சகா-
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என கல்முனையில் முருகேசு அறக்கட்டளை நிதியத்தை ஆரம்பித்துவைசத்துரையாற்றிய முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாக நானும் எனது தம்பியான முருகேசு உதயகுமாரும் சேர்ந்து முருகேசு அறக்கட்டளை நிதியத்தினை உருவாக்கி, அதன் முதற்கட்டமாக இன்று (04.09.2019), புதன்கிழமை, நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்திற்கு பேன்ட் வாத்திய அணிக்கான சீருடையினை நானும் எனது தாயான திருமதி.இராசமாணிக்கம் முருகேசு அவர்களும் வழங்கி வைத்தோம். மற்றும் எங்களுடன் இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உபதலைவர் க.கனகராஜா அவர்களும் பேன்ட் வாத்திய சீருடைகளினை வழங்கி வைத்தார்.

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் கல்வியின் மீதான ஆர்வமும், ஊக்கமும் இருந்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் வாழ்வில் உயர்வான நிலைக்கு வர முடியும்.
அத்துடன் ஒவ்வொரு மாணவரும் தமக்கு கல்வி புகட்டும் அதிபர், ஆசிரியர்களின் ஆசிர்வாதங்களைப் பெறக்கூடிய வகையில் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் எவ்வளவுதான் கல்வி அறிவில் மேலோங்கி இருந்தாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையேல் அவன் பெற்ற கல்வி பூச்சியமாகிவிடும்.

நாம் கல்வி கற்ற காலத்தில் இலவச பாடநூல் இல்லை, இலவச சீருடை இல்லை, இலவச மதிய உணவு இல்லை, கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்கள் இருக்கவில்லை, தளபாடங்கள் இன்மையினால் தரையிலும் மர நிழலிலும் இருந்து கல்வி கற்றோம்.
இந்த வகையில் நீங்கள் பாக்கியவான்கள். அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டியவர்கள். எதிர்காலத்தில் எங்களைப் போன்று இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் பாடசாலைகளுக்கும், ஆலயங்களுக்கும், வறிய மக்களுக்கும் உதவுபவர்களாக வர வேண்டும். அவ்வாறு வரவேண்டுமாயின் நீங்கள் கவனமாகப் படித்து ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழ்ந்து ஊரும் உலகும் விரும்பும் தலைவர்களாக வரவேண்டும் என்பதே எனது ஆசையாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -