அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் அரசியல்வாதிகளே கண்திறப்பீர்களா?

பிரதேசத்தில் அதிகரித்துவரும் வாகனப்பயன்பாட்டுக்கு ஏற்ப குறித்த வாகனங்களை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறும் வீதமும் அதிகரித்து வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்காக அம்பாறை நகர் நோக்கி செல்லவேண்டிய அவலநிலை நீடிக்கிறது. இங்கு மொழிப்பிரச்சினை உள்ளிட்ட அநேக பிரச்சினைகள் உள்ளன.
சுகாதார இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பாரளமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்கு மக்கள் படும் அவலங்களை இவர்கள் உணர்வார்களா? குறைந்தது மக்களின் அவலத்தைப்போக்க கரையோர பிரதேசத்தில் மேலதிக நிலையம் ஒன்றை அமைத்து  நிருவாக ரீதியாக செய்யக்கூடிய இந்த சிறிய பணியையாவது இவர்கள் செய்வார்களா? என மக்கள் தாங்களது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.

முகநூலில் சியாம் என்ற ஒருவரின் அனுபவமும் ஆதங்கமும் இது:

பொதுமக்கள் சார்பான வேண்டுகோள் 

சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவ சான்றிதளும் 
இன்று அதிகாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருதுவில் இருந்து அம்பாரைக்கு 4.45க்கு Medical எடுப்பதற்கு வந்த போது எனக்கு முன்பே சுமார் 80 பேர் வரிசையில் நிற்கின்றனர் தற்யோது நேரம் 6.15 இப்போது சுமார் 150 பேர் வரை வரிசையில் இதன் பிறகு வருபவர்களின் நிலை...... ஒரு நாளைக்கு 130 பேர் மாத்திரம் பரீட்சிக்கப்படுகின்றனர் ஒவ்வொரு நாளும் சுமார் 150-200 பேர் சந்தர்ப்பம் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர் தமது தொழில்களையும் வேலை களையும் விட்டு வரிசையில் நின்று சந்தர்ப்பமும் கிடைக்காது அம்பாரைக்கோ அல்லது மட்டக்களப்பு Medical Center க்கோ சென்று திரும்ப வேண்டியுள்ளது - இத்தனைக்கும் 8.30 மணிக்கேநிலையம் திறக்கப்படுகிறது அவ்வாறு காத்திருந்தும் ஏதாவது குறைபாடு இருந்தால் மீண்டும் அலைய வேண்டும்
இத்தனைக்கும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ நிலையம் மாத்திரம் உள்ளது என்பதனாலேயே இந்த அவல நிலை இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தலையீடு செய்து குறைந்தது மாவட்டத்துக்கு இரண்டு நிலையத்தையாவது அமைப்பதற்கு உரிய அமைச்சருடன் பேசி பெற்றுத்தர முன்வர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்கோள் விடுக்கின்றேன் பொது மக்களும் தங்களது கருத்துகளை பதிவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் பிரயோசனமான தகவல் என கருதினால் அதிகம் பகிருங்கள்... 








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -