ஜனாதிபதியிடம் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அவசர வேண்டுகோள்.
எம்.ஜே.எம்.சஜீத்-
அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை விடுதலை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு அவசரமாக தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்........
இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கைது தொடர்பாக முஸ்லிம் சமூகம் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. எமது நாட்டின் இறைமைக்கும், அரசியலமைப்புக்கும் எப்போதும் மதிப்பளித்து செயற்பட்டவர். கடந்த ஜம்பது வருடங்களாக அவரது பேச்சுக்கள், செயற்பாடுகள், எழுத்துக்கள் என்பன எந்தவொரு சந்தர்பத்திலும் நமது நாட்டின் இறைமக்கு எதிராகவோ, அரசியல் யாப்புக்கு முரணாகவோ நாட்டினது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைந்ததில்லை.
நமது நாட்டில் வாழுகின்ற இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவினையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தவர். நமது நாட்டிலே வாழுகின்ற மக்கள் அனைவரும் இலங்கையர் என்பதை மக்கள் மனதில் பதிப்பதற்கு அர்ப்பணிப்பான செயற்பாடுகளை மேற்கொண்ட இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும், முறைப்பாடுகளையும் அவர் மீது கொண்ட காற்புணர்ச்சி காரணமாகவே முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் சமூகம் கருதுகிறது.
உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் விடயத்தில் நீதியாகவும், நியாமான முறையிலும் செயற்பட்டு உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார் என்று முழு முஸ்லிம் சமூகம் நம்புவதாகவும், உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பாக பல்துறை சார்ந்தோர்களாலும், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் அவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுப்பதனூடாக இவரது செயற்பாடுகள் பல்துறை சார்ந்தோருக்கும் பயனுள்ளதாகவே அமைந்து நடாத்துவதற்கான செயற்பாடுகளில் அர்ப்பணிப்போடு செயற்பட்டுள்ளார் என்பதற்கான சான்றுபகர்கின்றது என தெரிவித்துள்ளார்.
Hon: Maithripala Sirisena,
Excellency the President,
Democratic Socialist Republic of Sri Lanka,
Presidential Secretariat,
Colombo.
Excellency,
Appeal for the release of Mr.Rasheed Hajjull Akber - Former President of Jamaat Islami
from arrest and detention by the Security Agencies
We wish to place the following matters for your kind and sympathetic consideration and redress.
Mr. Rasheed Hajjul Akber was taken into custody last week by the Security Agencies. He is still held in detention for investigations on some alleged accusations, without being released.
The arrest and detention of Mr. Rasheed Hajjul Akber has caused surprise and distress to the Muslim community as he is well known to all as a peace worker and a promoter of Sri Lankan Identity for peaceful co-existence among all communities. In this task he excelled himself in making the Muslims as an exemplary community to others. His past works and deeds are good examples in achieving this ideal.
Mr. Rasheed Hajjul Akber has always been opposed to extremism and terrorism. He has always upheld the sovereignty and respected the constitution of Sri Lanka. .In this endeavor, he has rendered 50 years of yeoman services and promoted peace harmony among all communities and religions. Accusations and complaints against him by others are due to personal enmity.
Therefore, several Civil Society Muslim organizations and intellectuals have all appealed for the release of Mr. Rasheed Hajjul Akber. Moreover, his continued detention is causing distress and loss of confidence among Muslims. We therefore appeal to your Excellency to kindly help speed up inquiries in this regard and for the early release of Mr. Rasheed Hajjul Akber from custody.
Thank you.
Yours truly,
M.S.Uthumalebbe JP,
Chairman,
Pre-School Education Bureau,
Eastern Province,
Former Minster of Road Development - EP.