பௌத்த அடிப்படைவாதிகளுக்கெதிராக காரைதீவில் கண்டன பேரணி

பாறுக் ஷிஹான்-
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது .
வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில் இந்த போராட்டமானது வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.
சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துக ,அனைத்துவிதமான பாரபட்சங்களை ஒழிக்குக ,சிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீராவியடியில் செத்தது நீதி, நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுங்கள்,சட்ட ஆட்சியை நிலைநிறுத்துங்கள், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இதன்போது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்திலிருந்து பேரணியாக காரைதீவு பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்தை வந்தடைந்து அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் ஏ .எல். இஸ்ஸதீன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டன பேரணியில் , வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -