இச்சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு பல்வேறு விதத்தில் சவூதி அரேபியா உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின்பேரில் இலங்கை வந்த குறித்த முக்கிய பிரமுகரை வரவேற்க வேண்டிய முஸ்லிம் கலாச்சார அமைச்சர் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் அமைச்சர்களாவது பிரசன்னமாகியிருகாதது குறையாகவே நோக்கவேண்டியுள்ளது.
குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட போரா இன தலைவரை வரவேற்பதற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையில் சிறு பகுதியைக் கூட சவூதி அரேபியா பிரமுகருக்கு வழங்கவில்லை என்பது வெளிப்படை. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் குறித்த பிரமுகரை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.