மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழாவையொட்டி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த பல்வேறுபட்ட நிகழ்வுகளில் ஒன்றான நடைபவனி இன்று பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து மன்னார் நகரத்தை நோக்கி பயணித்து பின் எருக்கலம்பிட்டியை சென்றடைந்தது.
இக்கல்லூரியில் கற்று பல்வேறு துறைகளை அலங்கரிக்கும் புத்தி ஜீவிகள்,துறைசார் நிபுணர்கள்,அரசியல் தலைவர்கள்,சன்மார்க்க அறிஞர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பாடசாலை மாணவர்கள் எனப்பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -