ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் உவைஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் பெரமுனவின் மருதானை மத்திய நிலையத்தில் நடைபெற்ற மௌலவி மற்றும் மௌலவியாக்களுடனான கலந்துரையாடலின் போது உலமா கட்சித்தலைவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் வரலாற்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் என்பது இன்று நேற்றையது இல்லை. எனது தந்தையார் கூட மௌலவி ஆசிரியராக இருந்தார் என்பதை வைத்து இதன் நீண்ட வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.
பின்னர் 1992ம் ஆண்டுக்குப்பின் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாத போது 2005ல் உலமா கட்சியை நாம் ஆரம்பித்து அதற்கான பாரிய போராட்டம் நடத்தி மஹிந்த ராஜபக்ஷ மூலம் 2010ல் 150 மௌலவிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க வைத்தோம். ஆனாலும் மௌலவிமார் பெரும்பாலும் எமக்கு தேர்தலில் வாக்களிக்காமல் நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டார்கள். இருப்பினும் நாம் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த ஐ தே க அரசு வந்ததும் மௌலவி ஆசிரிய நியமனத்தை இதோ வழங்கப்போகிறோம் என்றார்கள். மௌலவிமாரை விண்ணப்பிக்கச்செய்து விண்ணப்ப பணத்தை இந்த அரசு சுருட்டிக்கொண்டதுதான் மிச்சம்.
இது பற்றி நாம் கண்டன அறிக்கை விட்டால் உடனே அரசு தரப்பினர் இதோ விரைவில் நியமனம் கிடைக்கும் என்பர். எதுவும் நடக்கவில்லை.
2006ம் ஆண்டைய தரவுகளின் படி 635 மௌலவி ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இருந்தது. இப்போது 2019ம் ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடம் உள்ளது.
இவற்றை வென்றெடுக்க சிவில் அமைப்புக்களால் முடியாது. மாறாக அரசியல் கட்சிகளாலேயே முடியும். அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது ஜன பெரமுனவை பலப்படுத்த மௌலவிமார் முன் வருவதுடன் முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றுக்கொடுக்க பகிரங்கமாக முன் வர வேண்டும். அவ்வாறு முன் வந்தால் இந்த அரசு விழித்துக்கொண்டு இந்நியமனத்தை கொடுக்கும் அல்லது மஹிந்த தலைமையிலான அடுத்த அரசில் நாம் இதனை பெறமுடியும்.
அவ்வாறின்றி மௌலவிமார் வீட்டுக்குள் இருந்து கொண்டிருந்தால் ஆசிரிய நியமனம் கூரையை பொத்துக்கொண்டு வராது. 50 ரூபா உயர்வுக்காக நம் தமிழ் சகோதரர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். உலமாக்களை வீதியில் இறங்கும்படி நாம் சொல்லவில்லை. அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டு உலனா கட்சி பங்காளி கட்சியாக உள்ள பொது ஜன பெரமுனவை ஆதரிப்பதே மாற்று வழியாகும். ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதுதான் மஹிந்த ராஜபக்ஷ ஒன்றை சொன்னால் செய்து காட்டுபவர்.