நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் அவர்களினால் ரன் மாவத் திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் செலவில் காபட் இடும் வேலைத் திட்டம் இன்று (01.09.2019) ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை முக்கியஸ்தர் எஸ்.எல். முஹிஸின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இவ்வீதி முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவின் பணிப்பில் அப்போது சில வருடங்களுக்கு முன்னர் தேசிய காங்கிரஸ் கட்சியின் மாகாண அமைச்சராக இருந்த எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாகாண நிதியில் கொங்றீட் இடப்பட்டது.
அதன் பின்னர் ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இந்த கடற்கரைப்பள்ளி வீதிக்கு காபட் இடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலையும் நினைவுப்படிகம் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெற்று ஒரு வாரத்திற்குள் அந்த நினைவுப்படிகம் இனந்தெரியாத விசமிகளால் உடைத்தெறியப்பட்டது.
இத்தனைக்கும் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துர் ரஸ்ஸாகின் அயராத முயற்சியால் இனவாதம், அரசியல் என பல்முனைத் தடைகள் வந்தும் அதனை மிக சாதுரியமாக வெற்றி கொண்டு இவ்வீதியை காபட் இடும் இவ்வேலையை சிறப்பாக நிறைவேற்றித்தந்துள்ளார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை காபட் இட்டுத் தந்து மக்களின் மிக நீண்ட கால தேவையை பூர்த்தி செய்ய முன் வந்தமைக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அப்துர் றஸ்ஸாக் மற்றும் அவரோடு பக்க பலமாக இருந்து செயற்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான எஸ்.எல்.முஹிசிற்கும் பிரதேச மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.