எச்.எம்.எம்.பர்ஸான்-கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் நடாத்தப்பட்ட சமுர்த்தி சிறுவர் கெக்குலு கலை, கலாசார போட்டி நேற்று மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்ச்சியில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், சமுர்த்தி சிறுவர் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இதில் நாட்டார் பாடல், சாதாரண பாடல், கிராமிய நடனம், அறிவிப்பாளர், பேச்சு ஓவியம், சிறுவர் கதைகள், கோலாட்டம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன.
இப்போட்டி நிகழ்ச்சியின் நடுவர்களாக ஓட்டமாவடி கலாச்சாரப் பேரவை மற்றும் ஏறாவூர் கலாச்சாரப் பேரவைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -