விநாயகர் சதர்த்தியினை முன்னிட்டு மலையக ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றிய புகழும் தனிப்பெருந்தெய்வம் விநாயகர் அவரை வழிபட்டால் பேரும் புகழும்:செல்வமும்,உண்டாவதுடன் தீராத வினை தீரும்,கிராக தோசங்கள் நீங்கும்; என்பது ஐதீகம்.
எனவே உலகில் வாழும் இந்து மக்கள் மட்டுமன்றி ஏனைய சமூத்தனரும் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவ்வாறான பெருமைக்குரிய கடவுள் விநாயகர் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதும் இந்துக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விநாயகர் சதுர்த்தியினை முனனிட்டு மலையக ஆலயங்களிலும்; விநாயகர் ஆலயங்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றன.
சில ஆலயங்களில் இன்று விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு தேர்த்திருவிழாவும் இடம்பெற்றன.
மலையகத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பெயர்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 02 திகதி விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு அதிகாலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
பூஜை வழிpபாடுகளை ஆலய பிரதம குரு பிரம்ஸ்ரீ சந்திராநந்த குருக்கள் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன.
இதில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் அதிகாலை கோயிலுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டு தமது பிரத்தனைகளையும் நேத்திக்கடன்களையும் நிறை வேற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -