ஏஎம் றிகாஸ்-
தெற்காசிய நாடுகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வூட்டும் மேற்கத்தேய நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்ட விசேட குழு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று 03.09.2019 மாலை மட்டக்களப்பு- காயாங்கேணி கடற்கரையோரப்பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவம், பொலிஸ் பாடசாலை மாணவர்கள் மற்றும் உல்லாச விடுதிகளின் பணியாட்களும் இச்செயற்பாட்டில் பங்கேற்றனர்.
இவர்கள் காயாங்கேணி கடற்கரையில் ஒரு மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சுமார் 250 கிலோ கிராம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் திண்மக்கழிவுகளைச் சேகரித்தனர்.
இவர்கள் கண்டி, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களுக்கும் விஜயம்செய்து பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.