சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் திங்கள் (3)அதிகாலை (6.30) மணியளவில் யானைகள் பொதுமக்களின் வசிக்கும் பகுதிகளில் உள் நுழைந்து வீடுகள் உடமைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தின
இவ்வாறு யானைகள் திடிரென நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு சேதப்படுத்தியுள்ளன. மேலும் சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் வசிக்கும் ஏ.அமீர் என்ற நபர் மீது யானை தாக்குதலை நடாத்தி வீட்டின் உடமைகளுக்கு சேதத்தை ஏற்றபடுத்தியது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்மாந்துரை மஸ்ஜிதுல் சலாம் ஜும்மா பள்ளிவாசல் மதிலினையும் சேதப்படுத்தியுள்ளது .
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கையில் குறிப்பாக இவ் யானை அடிக்கடி எங்கள் பிரதேங்களுக்கு வருகின்றன
இதனால் எங்களுக்கு அச்ச நிலை காணப்படுகிறது சொத்துக்களுக்கு சேதங்கள் இடம்பெறுகின்றது .இது விடயத்தில் உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்க்கொண்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.