திருகோணமலையில் 2177 வேலைத் திட்டங்கள்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
தேசிய கொள்கைகள்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 2177 வேலைத் திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அறிவித்துள்ளது
இதில் 1384 வேலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளதாகவும், 793 வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மொத்தமாக 1261.55 மில்லியன் ரூபா செலவில் இத் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது இதில் திருகோணமலையில் உள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளுக்குமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
திருகோணமலை பட்டிணமும் சூழலும் 246 திட்டங்கள்,குச்சவெளி 344 திட்டங்கள்,பதவிசிறிபுர 33 திட்டங்கள், கோமரங்கடவெல 23 திட்டங்கள், மொரவெவ 93 திட்டங்கள், தம்பலகாமம் 231 திட்டங்கள், கிண்ணியா 489 திட்டங்கள், கந்தளாய் 151 திட்டங்கள், சேருவில 110 திட்டங்கள், வெருகல் 46 திட்டங்கள், மூதூர் 411 திட்டங்கள் என மொத்தமாக 2177 கம்பரெலியவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட 2019 ஆண்டுக்கான பன் முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஆகக்கூடிய வேலைத் திட்டங்களை நடை முறைப்படுத்தியவராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் அவர்கள் முன்னிலை வகிக்கிறார் இவர் சுமார் 91 வேலைத் திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது எனவும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவின் புள்ளி விபரம் மூலம் தெரியவருகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -