சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சர்வதேசப் பயணிகளுக்கு வரலாற்றில் முதற்தடவையாக சுற்றுலா வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு 49 நாடுகளுக்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய இந்தச் செயற்பாடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சவுதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சர்வதேச பயணிகளுக்கு ஆடை விதிமுறைகள் தொடர்பில் கடுமையான விதிமுறைகள் எவையும் விதிக்கப்படவில்லை எனவும் சவுதி அரேபிய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.