அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருக்கும் 500 பாடசாலை கட்டிடங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட இருக்கின்றது.
இந்த திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்திற்குற்பட்ட கல்முனை கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டட திறப்பு விழா நிகழ்வு இன்று (9) திங்கள்கிழமை பாடசாலையில் அதிபர் எம்.ஏ அஸ்தார் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் நஸீர் , கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் அப்துக் ஜலீல் அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார், ஏ.எம் பைறோஸ், எம்.எஸ் நிசார் (ஜேபி), ஏ.சி.ஏ.சத்தார், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.