கம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதியொதுக்கீட்டில் அனுராதபுரம் ஷாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 2019.07.31 அன்று நடப்பட்டது.
பாடசாலை அதிபர் MKM.ஜபார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மத்திய மாகாண தமிழ் மொழி உதவி கல்வி பணிப்பாளர் அப்துல் சமத், மாகாண விளையாட்டு துறைக்கான கல்வி பணிப்பாளர் ஹேமந்த அபேகோன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் ARM.தாறிக், அனுராதபுர மா நகர சபை உறுப்பினர் அல் பாரிஸ், கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினர் றபீக், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




