ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் கிளங்கன் பகுதியில் இன்று ( 01) காலை 5.30 மணியளவில் வீதியின் குறுக்கே பாய்ந்த பன்றியை ஒன்றினை காப்பாற்ற முயற்ச்சித்த முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் வரை பயணிகளை கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் நோர்வூட் பகுதிக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து வீதியின் குறுக்கே பாய்ந்த பன்றியினை காப்பற்ற முயற்சித்த போது சாரதிக்கு வாகனத்தினை கட்டுப்படுத்த முடியாது போய் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக முச்சக்கரவண்டியின் சாரதி தெரிவித்தார்.
குறித்த விபத்தில் சாரதி சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.இதன் போது முச்சகவண்டியினுள் வேறு எவரும் இருக்கவில்லை.
மரத்தில் மோதியதால் ஏற்படவிருந்த பேர் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார.;
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.