சாய்ந்தமருது நகர சபைக்கான இறுதி முஸ்தீபு!!!


சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை கோரிக்கை மற்றும் கல்முனை பிரதேச செயலக எல்லை வரையறை தொடர்பிலான இறுதி சுற்று பேச்சு வார்த்தை நேற்று (31.07.2019) பாராளுமன்ற கட்டிட தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாயல் நிருவாகம்,சாய்ந்தருது முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையிலான கல்முனை பிரதிநிதிகள், கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையிலான மருதமுனை பிரதிநிதிகள்,நற்பிட்டிமுனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தௌபீக் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர், அலிசாஹிர் மௌலானா மற்றும் கட்சியின் செயலாளார் நாயகம் நிஸாம் காரியப்பர், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீட் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

சுமூகமாக இடம் பெற்ற கருத்து பரிமாறல்கள் கல்முனையின் இருப்பு தொடர்பான எதிர் கால சவால்கள் தௌடர்பில் ஆழமாக ஆராயப்பட்டது.இந்த பேச்சு வார்த்தைகளின் முக்கிய அம்சமாக இந்த பிரச்சினைக்கான தீர்வு விரைந்து எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தௌடர்பில் வலியுறுத்தியதோடு இன்னும் ஒரு சில தினங்களில் தமிழ் தரப்புகளோடு பேசி ஓர் உடன்பாடு காணப்பட வேண்டடியதன் அவசிம் தொடர்பிலும் தலைவர் றவூப் ஹக்கீம் வலியுறுத்தினனார்.

இதனிடையே கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சார்பு பிரதிநிதிகள், சாய்ந்தமருதுக்கான சபை உருவாக்கப்பட்டதன் பின் கல்முனையயின் இருப்புக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் படசத்தில், நாங்கள் எங்களின் சபையை கைவிட்டு உங்களோடு கைகோர்க்க பின்நிற்க மாட்டோம் தேவை என்றால் அதனை நாங்கள் எழுத்திலும் தருவோம்.என வலியுறுத்தி பேசினார்கள். இந்த வாய்ப்பபை, இந்த காலத்தை உரிய.தரப்புகள் சாதகமாக பரிசீலித்து, இதய சுத்தியோடு பேசி பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.


ஆதம்பாவா ஜலால்டீன் 
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -