நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த சபையமர்வு டின்சின் கலாசார மண்டபத்தில் 15/08 சபைத்தலைவர் ரவி குழந்தைவேலுவின் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்
உறுப்பினர் எஸ்.கிருஸ்ண வேணியினால் முன்வைக்கபட்ட கைத்தொழில்முயற்சியாண்மை தொடர்பிலான பிரேரணையை ஆதரித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து அவர் உரையாற் றுகையில்,
மலையகத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது அது போலவே அரசாங்கத்தினால் நாடாத்தப்படுகின்ற சுயதொழில் பயிற்சி நிலையங்களிலும் மலையக இளைஞர், யுவதிகளை பயிற்சியை பெற வழிகாட்டல் அவசியமா கின்றது.
அந்த வகையில் அட்டன் பூல்பேங் தொழில் பயிற்சி நிலையத்தினூடாக கணிசமான அளவிலானோர் தொழிற்பயிற்சியை பெற்று நன்மையடைந்து வருகின்றனர்.
அவ்வாறே நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சமர்வில் வட்டாரத்தில் இலங்கை மின்சார சபையின் கீழ் காசல்ரீ தொழில்நுட்ப பயிற்சி நிலையம் 50 வருட காலமாக இயங்கி வருகின்றது. இதில் மின்சாரத்துறைசார்ந்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு சர்வதேச தரத்திலான சான்றிதழும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு பயிற்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இல்ங்கை மின்சாரசபை, அரச.தனியார் கம்பனிகளில் மின்சாரதுறைசார் தொழிலை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடுகளிலும் மின்சாரதுறைசார் தொழிலில் இணைந்துகொள்ளவும் முடியும்
இவ்வாறு முக்கிய துறைசார் பயிற்சியை வழங்கும் காசல்ரி தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு நாடளாவிய ரீதியிலிருந்து பெரும்பின்மையினத்தவரும் வடகிழக்கை சேர்ந்தவர்களுமாக பல்லாயிரக்கணக்னோர் வருகைத்தந்து பயிற்சியை பெற்றுக்செல்கின்றார்கள் ஆனால், மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளின் வருகை பூஜ்யமாகவே காணப்படுகின்றது.
ஆகவே காசல்ரீ தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட எல்லைபகுதியையும் தான்டி இளைஞர், யுவதிகளை பயிற்சியை பெற்றுக்கொள்வது தொடர்பில் விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார் .
