கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை
மற்றும் வழிகாட்டலின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய தேசிய கலையின் உணர்வுமிக்க ரிதம் எனும் கவியரங்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் தலைமையில் கடந்த (20.08.2019) அன்று பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
இக்கவியரங்கு "மனிதனாக மீண்டெழுவோம்" எனும் தலைப்பில் இடம்பெற்றதுடன், 8 கவிஞர்களின் கவிபாடலும் அவர்களுக்கான தராதரப் பத்திரமும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளரான எஸ்.அகீலா பாணு , உதவிப் பிரதேச செயலாளரான என்.நவனீதராஜா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான், ஏனைய கலாச்சார உத்தியோகத்தர்கள் ,கவிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.







