சாய்ந்தமருதில் ஒருகோடி எழுபது லட்சம் செலவில் காபட் வீதி!!!

எம்.வை.அமீர்-
ல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் எடுத்துக்கொண்ட முயச்சியின் காரணமாக ஒருகோடி எழுபது லட்சம் ரூபாய் செலவில் சாய்ந்தமருது சந்தை வீதிக்கு காபட் இடும் பணிகள் 2019.08.31 இல் நிறைவடைந்தது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும் “ ரண் மாவத்” ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் குறித்த வீதிக்கான காபட் இடும் பணி இடம்பெற்றது.
நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் அவர்கள் பல வீதிகளை புனரமைத்தது உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருப்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற மேற்படி சந்தை வீதி, கடந்தகாலங்களில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது வீதி புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீதியை புனரமைப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -