அஹங்கமையில் அமைச்சர் ரிஷாட்பதியுதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்(வீடியோ)

அஸீம் கிலாப்தீன்-
மாத்தறை அஹங்கமயில் திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக இன்று (31) பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்,காத்தான்குடி,கல்முனையில் நடந்து கொள்வதைப் போன்று இங்கு எவர்களும் நடந்து கொள்ளக் கூடாதென்றும் கூக்குரலிட்டனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகளை அரசியல் இலாபத்தித்திற்காகப் பயன்படுத்த முனையும் சில தீய அரசியல் சக்திகளே,இவர்களைத் தூண்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இப்பகுதிக்கு விஜயம் செய்வதற்கு இரு மணித்தியாலயங்களுக்கு முன்னரே இக்கடும் போக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிலைமைகளின் விபரீதங்களை உணர்ந்து கொண்ட அமைச்சர் தனது விஜயத்தை ரத்துச் செய்ததையடுத்து குறித்த பாடசாலை இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன,பிரதியமைச்சர் கருணாதிலக்க பரணவித்தாரண உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -