தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சுகாதார சிகிச்சை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கழிவறைத் தொகுதியினை பொதுமக்களுக்கு கையளித்தலும் மரக்கன்று நடுதல் நிகழ்வும்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ் ஐ.முகம்மட் கபீர் தலைமையில் 2019.08.26 திங்கட்கிழமை செந்நெல் கிராமம் 01 இல் உள்ள சுகாதார சிகிச்சை நிலையத்தில் நடைபெற்றது.
தமிழா ஊடக வலையமைப்பின் பசுமைப் புரட்சி திட்டம் -2019 கீழ் வித்யாசாகர் கலை மன்றத்தின் போசகர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களின் அன்பளிப்பின் மூலம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையின் சுகாதார சிகிச்சை நிலையத்தில் கழிவறைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டடு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் அதிதிகளால் நட்டப்பட்டன.
இவ்விழாவை தமிழா ஊடக வலையமைப்பு பணிப்பளார் எஸ்.முஹம்மது ஜெலீஸ் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தர்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த்தாய் அறக்கட்டளை தமிழ்நாடு இந்தியா திரு. உடையார்கோயில் குணா அவர்களும், சிறப்பு அதிதிகளாக
சம்மாந்துறைபிரதேச செயலாளர் ,
எஸ்.எல்.முஹம்மது ஹனீபா பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் ,
தலைவர் சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை அமைப்பின் தலைவர்
எம் .எச். எம்.இப்றாஹிம் ,தமிழா ஊடக வலையமைப்பு, ஆலோசகர்
எம்.ஐ. அச்சி முஹம்மட், தமிழா ஊடக வலையமைப்பு
பிராந்திய முகாமையாளர் ஜே. எம். பாஸித் மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.




