நூருல் ஹுதா உமர்-
சம்மாந்துறை பிரதேசத்தில் விரைவாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான “i Road Project” இன் வேலைத் திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
நெடுஞசாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வளங்கள் அமைச்சில் இடம்பெற்றது. குறித்த விடயம் சம்பந்தமான கலந்துரையாடல் இரண்டு நாட்களாக இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலும், அமைச்சிலும் நடைபெற்ற சந்திப்புக்களின் பின்னர் கருத்து வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த இந்த அபிவிருத்தி திட்டமானது சுமார் 2015 காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அமைச்சர் கபீர் ஹாசிமின் முயற்சியின் பாலனாகவே நடைமுறைக்கு வந்துள்ளமை மகிழ்சிக்குரிய விடயமாகும். இந் நிலைமையில் ஏற்கனவே இதற்கான திட்ட வரைபுகள் கோரப்பட்டிருந்த போதிலும் தற்போதைய சூழலில் ஐக்கிய தேசிய முன்னணி, அதன் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு ஊடாக குறித்த திட்டத்தினை நாடுபூராகவும் விஸ்தரிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை வீதிகளின் முழு விபரத்தினையும் அமைச்சில் கையளித்த போது எமது ஊரில் சுமார் 17 வீதிகள் காபட் வீதியாகும் அபிவிருத்திக்காக செய்யப்பட்டுள்ளன.
1. பழைய மார்கட் வீதி - 1.71 கிலோமீற்றர்
2. மலையார் விஷ வைத்தியர், விஷ வைத்தியர் வடக்கு வீதி - 0.75 கிலோமீற்றர்.
3. செட்டியாவட்டை வீதி – 0.64 கிலோமீற்றர்.
4. மத்திய வீதி – 0.98 கிலோமீற்றர்.
5. ஆண்டி வீதி (5ஆம் குறுக்குத் தெரு) – 0.9 கிலோமீற்றர்.
6. அல்- அர்ஷத் வடக்கு வீதி (மலையடிக் கிராமம்-3) - 0.44 கிலோமீற்றர்.
7. சலாம் பள்ளி முன் வீதி (கல்லரிச்சல்-3) - 0.55 கிலோமீற்றர்.
8. மல் 15ஆம் வீதி, புளக் ‘ஜே‘ வடக்கு 01 - 0.62 கிலோமீற்றர்.
9. அம்- 14, 15 ஆம் வீதிகள், உடங்கா2 – 0.83 கிலோமீற்றர்.
10. ஹிஜ்ரா 2அம் வீதி, ‘புளக் ‘ஜே‘ கிழக்கு 2 – 0.59 கிலோமீற்றர்.
11. கருத்திட்ட வீதி (மலையடிக்கிராமம்-3) – 0.46 கிலோ மீற்றர்.
12. அம் 10,11ஆம் வீதிகள் – 0.64 கிலோமீற்றர்.
13. மஜீட்புரம் பாடசாலை வீதி, மல்வத்தை 3 – 1.03 கிலோமீற்றர்.
14. “எஸ்” வாய்க்கால் நீர்ப்பாசன வீதி (உடங்கா-2) – 1.31 கிலோமீற்றர்.
15. குளத்தடி பிள்ளையார் கோவில் வீதி, மல்வத்தை 1 பிரி 1,2 – 0.95 கிலோமீற்றர்.
16. மதீனா உம்மா வீதி (புளக் ஜே கிழக்கு - 3) – 0.84 கிலோமீற்றர்.
17. பழைய வளத்தாப்பிட்டி லாலி கோவில் வீதி முதல் பலவவெலி கல்முனையார் வீதி, பிரிவு 1,2 – 4.58
குறித்த வீதிகள் நெடுங்காலமாக அபிவிருத்தித் தேவையுடைய வீதிகளாக இருந்தமையை இனங்கண்டு இவைகள் முன்மொழியப்பட்டதையடுத்தே அவற்றுக்கான அபிவிருத்தி வேலைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் சில நாட்களில் குறித்த அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
மேலும், இவ் வேலைத்திட்டங்கள் நாடு முழுவதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலைமையில் குறித்த பிரதேசங்களுக்கான திட்டப் பொறுப்பாளர்கள் அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட வேண்டிமையும் அவசியமாகும். - என்றார்.

