ஏறாவூரில் இருந்து 15 தொன் கஜூ பக்கட்களை ஏற்றிச் சென்ற லொறி அட்டன் பகுதியில் தடம்புரண்டது.




க.கிஷாந்தன்-

ட்டகளப்பு ஏறாவூர் பகுதகயிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகள் ஏற்றி சென்ற கனரக லொறி ஒன்றே அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து 09.08.2019 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா ஊடாக லிந்துலை பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனத்தின் தடுப்பு கட்டை இயங்காமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் தப்பியதன் காரணமாக இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -