தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட்கிழமை (27)பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வீட்டுத் தோட்டத்திற்கான உரம் மற்றும் விதைகள் பெறல்,முதலீட்டு கடன் பெறல், வர்த்தக உரிமம் வியாபாரப் பதிவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குதல் கால்நடை தொழிலாளர்களின் பிரச்சினை என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கால்நடை திணைக்கள அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டமேலும் பலர் கலந்துகொண்டனர்.