ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுக்கும் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சிக்குமிடையிலான‌ பேச்சுக்க‌ள் வெற்றி.-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுக்கும் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சிக்குமிடையிலான‌ பேச்சுக்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ செல்வ‌தையிட்டு பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் ப‌ங்காளிக்க‌ட்சி என்ற‌ வ‌கையில் முஸ்லிம் உல‌மா க‌ட்சி த‌ன‌து ம‌கிழ்ச்சியை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

இந்த‌ நாடு சுத‌ந்திர‌ம் பெற்ற‌திலிருந்து ஆட்சி செய்த‌ க‌ட்சிக‌ளில் சுத‌ந்திர‌க்க‌ட்சி முஸ்லிம்க‌ளுக்கு பெரும் சேவைக‌ளை செய்துள்ள‌து. ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் பெரும் க‌ட்சியாக‌ வ‌ள‌ர்ந்த‌ போது த‌லைவ‌ர் அஷ்ர‌ப் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சி த‌லைமையிலான‌ கூட்டுட‌னேயே இணைந்தார். ஒரு சில‌ த‌ப்புத்த‌ண்டா ந‌ட‌ந்த‌ போதும் த‌லைவ‌ர் அஷ்ர‌பின் ஆட்சிக்கால‌ம் முஸ்லிம் அர‌சிய‌லில் பொற்கால‌மாகும்.
அத‌ன் பின்ன‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சியிட‌ம் அடிமைப்ப‌ட்டு கிட‌ந்தும் முஸ்லிம்க‌ளுக்கென‌ எதையும் சாதிக்க‌ முடிய‌வில்லை.
ஆயினும் 2005ம் ஆண்டு ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ உல‌மா க‌ட்சி சுத‌ந்திர‌க்க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ இருந்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரித்து இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திலிருந்து விடுத‌லை பெற‌ ஒத்துழைத்த‌து.
பின்ன‌ர் 2015ம் ஆண்டு ட‌ய‌ஸ்போராக்க‌ளின் சூழ்ச்சிக‌ளுக்கு இரையாகிய‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌ த‌லைமையிலான‌ ந‌ல்லாட்சிக்கு வாக்க‌ளித்து ஏமாந்த‌து ம‌ட்டும‌ன்றி அம்பாரை முத‌ல் மினுவாங்கொடை வ‌டை அடி வாங்கிய‌து ம‌ட்டுமே மிச்ச‌மான‌து.
இந்த‌ நிலையில் ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌வுட‌னேயே இந்த‌ நாட்டின் அதிக‌ வாக்குக‌ள் பெற்ற‌ முத‌லாவ‌து க‌ட்சியாக‌ ப‌ரிண‌மித்த‌து.
எம்மை பொறுத்த‌வ‌ரை ம‌ஹிந்த‌வும் மைத்திரியும் ஒரு வீட்டு பிள்ளைக‌ளாகும். இருவ‌ரும் இணைந்து செய‌ற்ப‌டுவ‌தே நாட்டுக்கு ந‌ல்ல‌து என்ப‌தை க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து.

இந்த‌ வ‌கையில் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வும் சுத‌ந்திர‌க்க‌ட்சியும் இணையுமாயின் பெர‌முன‌வின் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் அறுப‌து ல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ வாக்குக‌ள் பெற்று அமோக‌ வெற்றி பெறுவார் என‌ உல‌மா க‌ட்சி எதிர் பார்க்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -