மனித உயிர்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள டெங்கு தாக்கத்திலிருந்து எமது மாற்றுத்திறனாளிகளையும், ஏனையவர்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ. தெளபீக் (ஸஹ்வி) தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கூட்டம் நேற்று ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
தற்போது பெருகிவரும் டெங்கு நோயிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்புப் பெறவேண்டும். டெங்கு நோயைக் கட்டுப்படுத்த எங்களது அமைப்பினூடாக மிகவிரைவில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
குறித்த வேலைத்திட்டத்தில் நூறுபேர் இணைக்கப்பட்டு அதில் இருபது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, பதுரியாநகர், மாஞ்சோலை ஆகிய பகுதிகளுக்கு டெங்கொழிப்பு திட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளின் முக்கிய பிரச்சினைகள் பல தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. அதில் அரசாங்கத்தினால் குறித்த பகுதிகளில் காணப்படும் 127 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர், மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில்சமூக சேவை உத்தியோகத்தர் சேகர், மட்டக்களப்பு YMCA நிறுவனத்தின் உத்தியோகத்தர் சுபேந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.