ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸினால் கல்குடாத் தொகுதிக்கு சுமார் 175 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹபீப் றிபானின் அழைப்பின் பேரில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், மக்கள் சந்திப்பிற்காகவும் கடந்த 05.07.2019ஆம் திகதி கல்குடாத் தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் வருகை தந்திருந்தார்.
இதன்போது, வட்டாரங்களுக்கான அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸினால் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
றனீஸ் இஸ்மாயில்
வட்டார அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
