ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உங்கள் மனதில் உள்ளவரும் என்மனதில் உள்ளவரும் கட்டாயமாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யபடுவார்.

விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

க.கிஷாந்தன்-
ல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்டஅசாம்பாவிதம் காரணமாக இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்னர்.அவர்களுக்கு சகல துறைசார்ந்த விடயங்களிலும் பின்னடைவு ஏற்பட்டு வருகின்றது. இதனை அனுதிக்க முடியாது. இந் நிலைதொடருமாயின் நாட்டில் பொருளாதார ஸ்தீரதன்மை ஏற்படும் இதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றுகூறுகின்றார் விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதிவே.இராதாகிருஸ்ணன்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஹப்புகஸ்தலாவை அல்மின்ஹாஜ் தேசிய கல்லூரியில் கல்விஅமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் 82.5 மில்லியன்ரூபா செலவில் கட்டபட்ட மூன்று மாடி கட்டடம் அதிபர் விடுதி ஆசிரியர் விடுதி அகியன பாடசாலை சமூகத்திற்கு கையளிக்கும்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு கொத்மலை பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் அசோக ஹேரத் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் பொழுது மாணவதலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்.

இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையாக வாழும் மக்கள். இவர்களை இனைத்துக் கொண்டு தான் இந்தநாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை உணர்ந்துக் கொண்டு பெருபான்மை மக்கள் செயற்பட வேண்டும்.
தற்போது இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. இதற்கு எங்களின் ஒத்துழைப்பு அவசியம். தற்போது ஜனாதிபதிதேர்தலுக்கு மூன்று பெரும்பான்மை கட்சிகள் மும்முறமாக செயற்பட்டு வருகின்றனர். இதில் இரண்டு கட்சிகள் தங்கள்வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டது. ஐ.தே.கட்சி இன்னும் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யவில்லை.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -