உப்புநீரைப்பயன்படுத்தி அனுமதியில்லாமல் கொங்கிறீற் வீதியா? தவிசாளர் ஸ்தலத்திற்கு விரைந்து வேலையை இடைநிறுத்தினார்.


காரைதீவு நிருபர் சகா-
ப்புநீரைப்பயன்படுத்தி பிரதேசசபையின் அனுமதியில்லாமல் கொங்கிறீட் வீதியமைத்ததை பொதுமக்கள் சுட்டிக்காட்டியதையடுத்து தவிசாளர் உடனடியாகச்சென்று அவ்வேலையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் காரைதீவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களின் புகாரையடுத்து காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி குறித்த வேலையை இடைநிறுத்தம்செய்துள்ளார்.
பிரதேசசபைக்குட்பட்ட வீதியை அந்தபிரதேசசபையின் அனுமதியில்லாமல் புனரமைப்புச்செய்தது தொடர்பான பிரதேசசபை உறுப்பினர்கள் போர்க்கொடிதூக்கியுள்ளனர்.
காரைதீவு 3ம் பிரிவில் உள்ள அதாவது சித்தானைக்குட்டி கோவில் அருகாமையில் உள்ள வீதியை செப்பனிடும் கொந்துராத்து ஒப்பந்தக்காரர் கரச்சையில் உள்ள உப்பு நீரை பயன்படுத்தி கொன்கிரீட் கலவையை தயார் செய்து மொத்த வீதியின் கால் பகுதியை செப்பனிட்டு முடித்துள்ளார்.

காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட இந்த வீதியை பிரதேசசபையின் அனுமதியில்லாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செய்துள்ளது. மட்டுமல்லாமல் மேற்பார்வைக்கு தொழினுட்ப உத்தியோகத்தர் இல்லாமல் இவ்வேலை நடைபெற்றது ஏன? இவ்வாறு வினா எழுப்ப்பட்டது.
அந்த கென்றக் உரிமையாளர் கரச்சையில் தேங்கி இருந்த உப்பு நீரைக் கொண்டு வீதி கொங்கிறீற் இட்ட போது இந்த விடயம் அறிந்து பொதுமக்கள் ஆவேசப்பட்டு உடனடியாக தடுத்து நிறுத்தினார்கள் , கடமையில் இருக்கவேண்டிய தொழினுட்ப உத்தியோகத்தர் 3 மணித்தியாலங்கள் பிறகு வந்து பிரச்சனையை கூறியபோது அவர் நல்ல நீர்கொண்டு கொங்றீற் அடிக்கப்பட்டது.
இதற்கு மேலாக பிரதேசபை தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது. தவிசாளருக்கு எந்த அறிவிப்பும் வழங்காமல் வீதி கொங்கிறீற் இடப்பட்டது உரிய இடத்திற்கு உடனடியாக வந்த தவிசாளர் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வீதி கொங்கிறீற் இடுவதை உடனடியாக நிறுத்தி உள்ளார்.
எனவே வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த உப்பு நீரில் போடப்பட்ட இந்த வீதியை அகற்ரிவிட்டு சிறந்த முறையில் வீதி போடாவிட்டால் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டம் இடம் பெறும் என அவர்கள் தெரிவித்துளளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -