ஹட்டன் கே சுந்தரலிங்கம்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்னால் பிரதான வீதியில் இன்று 31 திகதி மாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தபொல பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து நகரசபை குறுக்கு வீதிக்கு திருப்ப முற்பட்ட முச்சக்கரவண்டியுமே இவ்வாறு மோதுண்டுள்ளன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கில் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக பொலிஸார்க்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இருவரும் சமாதானமாகியதனால் வழக்கு பதிவு செய்யப்படவி;ல்;லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக முச்சக்கரவண்டி சாரதிகள் வீதி சமிஞைகளையும் வாகன சமிஞைகளையும் பொறுப்படுத்தாது வாகனத்தை செலுத்துவதனால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுவதனையும் சிசிடிவி காணொளிகள் மூலம் காண்கின்றோம்.
இதனால் பொது மக்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்வோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மகம் கொடுக்கின்றனர்.
எனவே இவ்வாறான விபத்துக்கள் நடைபெறுவதனை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.