21வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா-2019 எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி பிற்பகல் 3.00மணிக்கு கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயக அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.
இலக்கிய உலகில் நீண்ட நாட்களாய் பணிபுரிந்து வரும் சிங்கள, தமிழ் ஆங்கில மொழி இலக்கிய ஆளுமைகளான பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயக, பேராசிரியர் வினி விதாரண, திருமதி பத்மா சோமகாந்தன் ஆகியோருக்குகொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்படும்.
மேலும் இவ்விழாவில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கள தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவந்த நாவல் சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பல்துறைச் சார்ந்த சிறந்த நூல்களுக்கு கொடகே விருதுகள் வழங்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -