அம்பாரை மாவட்ட முன்னாள் சமுர்த்தி இணைப்பாளராக கடமையாற்றிய சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் (ஐயூப்) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இப்பதவியுயர்வுக்கான நியமனக் கடிதத்தினை சிறு கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவினால் (21) அமைச்சு காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 26 பேருக்கு இப்பதவியுயர்வு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் வடக்கு, கிழக்கு சார்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தரராக அலியார் தெரிவு செய்யப்பட்டு இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அலியாரின் அர்ப்பணிப்புடனான சிறந்த பணி, ஆளுமை, மூன்றாம் மொழி ஆற்றல், உயரதிகாரிகள் முதல் ஏனைய உத்தியோதத்தர்களை மதிக்கும் பண்பும் நற்பும், அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பாங்கு, விவேகமான செயற்பாடு நிர்வாகத்திறன் போன்ற உயரிய பண்புகளுக்கு கிடைத்த உயர்வாகும்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி முகாமையாளராக நியமனம் பெற்று பின்னர் கணக்காய்வாளராகவும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளராகவும், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளராகவும், திணைக்காத்தின் வங்கி மற்றும் குறுநிதிப் பிரிவின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராகவும் கடமையாற்றி அலியார் இன்று உதவிப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
