கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் கல்வியதிகாரிகள் நான்கு பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


ஏஎம்றிகாஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் கல்வியதிகாரிகள் நான்கு பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிமனையில் 01.08.2019 நடைபெற்றது.

நிருவாக உத்தியோகத்தர் சீஎம். ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்எம்.எம்எஸ். உமர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எல்ஏ ஜுனைட் , காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்ஏசிஎம் . பதுர்தீன், விஞ்ஞான பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏஎம் றபீக் மற்றும் கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்வைகே. நஸீம் ஆகியோர் தமது சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றனர்.
இவர்கள் ஆசிரியர்களாக, அதிபர்களாக பணியாற்றியதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளாகப் பணியாற்றினர்.

இவர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் பாடஇணைப்பாளர்கள் மற்றும் பணிமனை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -