இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளைத் திருடி பத்திரிகைகளுக்கும், ஏனைய செய்தித் தளங்களுக்கும் அனுப்புகின்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள் பலர் நிகழ்வுகள் மற்றும் அவசரச் சம்பவங்கள் இடம்பெறும் இடங்களுக்குச் சென்று செய்திகளை சேகரித்து பத்திரிகைகளுக்கும், இணையத்தளங்களுக்கும் அனுப்புகின்றனர். அவ்வாறு சிரமத்திற்கு மத்தியில் சேகரித்து அனுப்புகின்ற செய்திகளை சில ஊடகவியலாளர்கள் வீட்டினில் இருந்தவாறே செய்திகளை திருடி பத்திரிகைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு செய்திகளை சேகரிக்கின்ற ஊடகவியலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இவ்வாறு செய்திகளை திருடி பத்திரிகைகளுக்கு அனுப்புகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக செய்திகளுக்கு சொந்தமான ஊடகவியலாளர்கள் இணையத்தள நிருவாகிகளிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக இணையத்தள நிருவாகிகள் முறைப்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.