மிக மீண்ட காலமாக பிரதேசத்தில் தேவையுடைய தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கல்வி, விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நிதியுதவிகளையும் ஏனைய உதவிகளையும் செய்துவரும் யஹ்யாகான் பௌண்டேசன், 2019.08.14 ஆம் திகதி குறித்த விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு தொகை நிதியை வழங்கிவைத்தது.
சாய்ந்தமருது Bவிளாஸ்ட்டர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எல்.பஸ்மிர், நிதியுதவியை யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹஜ் ஏ.சி. யஹ்யாகான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த யஹ்யாகான், பிராந்தியத்தின் ஒவ்வொரு துறையும் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய தேவை இருப்பதாகவும் அவைகளை தன்னால் முடிந்தவரை தனிப்பட்டமுறையிலும் தான் சார்ந்த கட்சி சார்பாகவும் செய்வதற்கு முனைவதாகவும் தெரிவித்தார்.