90 இலட்சம் நிதியில் மருந்து உற்பத்திப் பிரிவு மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு


பைஷல் இஸ்மாயில் –
90 இலட்சம் ரூபா நிதியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் ஆயுர்வேத மருந்து உற்பத்திப் பிரிவு மற்றும் தம்பிலுவில் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (22) இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் ஆயுர்வேத மருந்து உற்பத்திப் பிரிவு 40 இலட்சம் ரூபா நிதியிலும், தம்பிலுவில் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை 50 இலட்சம் ரூபா நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வைத்தியசாலைகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன், ஆயுர்வேத திணைக்கள உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -