யாழ். காரை நகர் துறைமுகத்திற்காக அரசு 265 மில்லியன் ரூபாவை செலவளித்துள்ளது : செப்டம்பரில் திறக்கப்படும் - திலிப் வெதஆரச்சி




கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம் - ட மாகாணத்தில் கடற்றொழிலை எழுச்சியடைய செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சீனோர் (CEYNOR) நிறுவனத்திற்குரிய யாழ்ப்பாணம், காரை நகர் படகு உற்பத்தி நிலையத்தினை உடனடியாக திறந்து உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான படிமுறைகளை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்கள் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள படகு உற்பத்தி நிலையத்தின் தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வது சம்பந்தமாக அங்கு மேற்கொண்ட சுற்றுளாவின் போது (16) வடக்கு வாழ் மீனவர்களை சந்தித்த போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கட்டப்படவுள்ள காரைநகர் துறைமுகம் 1 ஏக்கர் 3 ரூட் (rood) விசாலமான இடத்தில் அமைந்துள்ளது.
நோர்வே அரசின் அனுசரணையில் 1967 ஆம் ஆண்டு தனியார் முதலீடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த துறைமுகம் 1971 ஆம் ஆண்டில் அரசுடமையாக்கப்பட்டது. அதன் மூலம் நிர்வாகமானது சீனோர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டுக்கு முதலில் இந்தத் துறைமுகத்தின் உற்பத்தி நடவடிக்கைளின் மூலம் இலாபம் ஈட்ட முடிந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் 1983 ஆம் ஆண்டு முதல் இந்த காரைநகர் துறைமுகத்தில் உற்பத்திப் பணிகள் தடைப்பட்டிருந்ததற்கான காரணம் யுத்த சூழ்நிலையாகும். யுத்த முடிவின் பின் காரைநகர் துறைமுகத்தை புனரமைக்க மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

அதன் படி காரைநகர் துறைமுகத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு, அதனது பொறுப்பினை மீண்டும் 2018 ஆம் ஆண்டு சினோர் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைளுக்காக அரசு செலவளித்தது ரூபா 265 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இந்தத் துறைமுகம் அடுத்த மாதத்தில் (செப்டம்பர்) திறந்து, உற்பத்தி நடவடிக்கைளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத்திற்கான கண்காணிப்பு சுற்றுளாவில் வைத்து இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்கள் தெரிவித்தார்.
துறைமுகத்திற்கு வந்த அமைச்சர் அவர்களை வடக்கிலுள்ள மீனவர்கள் கோலாகலமாக வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் உரையாடும் போது, வடக்கில் வேகமாக வளர்ந்து வரும் கடற்றொழிலுக்கு அவசியமான உபகரணங்களை மிகவும் குறைந்த விலையில், தரமாக சினோர் நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதே போன்று புதிய துறைமுகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதோடு, மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சினோர் நிறுவனம் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -