சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைகளின் சுற்றாடல் கழக மாணவர்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்குமுகமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (03) நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் ஆணையாளர் ஆசிரியர் ஏ.சியாம், வலைய ஆணையாளர் ஏ. ராஷிக் ஆகியோர் இணைந்து மாணவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்காக சுற்றாடல் முன்னோடிகளுக்கான தொப்பிகள், குறிப்புப் புத்தகங்கள், முன்னோடிப் பதக்கங்கள், தாவரப் பதக்க சான்றிதழ்கள் என்பவற்றை
சாஹிரா தேசிய பாடசாலை, அல்-ஜலால் வித்தியாலயம், மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம்,
அல்- ஹிலால் வித்தியாலயம்,
லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம்,
எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம்,
ஜி.எம்.எம்.எஸ். பாடசாலை,
அல்-கமறூன் வித்தியாலயம், றியாலுல் ஜன்னா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.