எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று (4) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சென்ற வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் மற்றும் பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவிகள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் ஆகியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு ஆயிஷா சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மற்றும் மாணவத் தலைவிகளுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டதோடு மாணவத் தலைவிகளின் சத்தியப்பிரமானமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர், பிரதேச முக்கியஸ்தர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.