முஸ்லிம் சமூகம் தலைமையை அடையாளங்காண வேண்டிய தருணம்.



எம்.என்.எம்.யஸீர் அறபாத், ஓட்டமாவடி-

ற்போது இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான நெருக்கடி நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிப்பது யார்? என்ற கேள்வியும் பரவலாக எல்லோரின் மனங்களிலும் எழுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உட்பட ஒரு சில பேரினவாதிகளும் முஸ்லிம்களுக்கு தலைமைத்துவமில்லை. தலைமைத்துமில்லாத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதாகக்கூறி, முஸ்லிம் சமூகத்தை அவ்வாறே தங்களுக்கு தலைமையில்லையென உணர வைத்து, அவர்களையும் முஸ்லிம் தலைமைகளையும் உளவியல் ரீதியாகப் பிரித்து தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க முற்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளிலும் நமக்கெதிரான சதிவலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அரசியல் ரீதியாக நாம் முன்னெடுக்க வேண்டிய நமது பாதுகாப்பு விடயத்திலும் நமக்கான தலைமையைச் சரியான முறையில் அடையாளங்கண்டு செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம்.

யார் தற்போதைய சூழ்நிலையில் மார்க்கத்தலைமைகளின் வழிகாட்டுதலுடன் அரசியல் ரீதியாக எல்லோரையும் இணைத்துக்கொண்டு சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுகின்றாரோ, அவரின் கருத்துக்களை ஏனைய சமூகத்தவர்களும் நடுநிலையானவர்களும் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மும்மொழிப்புலமையுடன், நடுநிலையாக, பக்குவமாக முன்வைக்க வல்லமை கொண்ட, பேரினவாதிகளால் கூட எவ்வித இனவாத, தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாத தலைமையாகச் செயற்படும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான செயற்பாடுகளைக்கொண்டு சென்று சமூகத்தின் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ள பாடுபடும் தலைமையாகச் செயற்படவும், தன்னை அழிக்க முற்பட்டவர்களை இன்று வீண் பழிகளிலிருந்து பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதால் பேரினவாதிகளில் வீண் சந்தேகங்களுக்குள்ளாகினாலும், அதனையும் சமூகத்திற்காக ஏற்று பணி செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் தூரநோக்குடன் அறிமுகஞ்செய்து வைத்த தற்போதைய சூழ்நிலையில் எல்லோராலும் சிலாகித்துப் பேசக்கூடிய தலைவன் றவூப் ஹக்கீம் என்றால் மிகையாகாது.

ஏனையவர்களும் தங்களை தலைவர்களாக பண, அதிகார பலங்களை முற்படுத்தி உறுதிப்படுத்த கடந்த காலங்களில் பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும், இன்றைய சூழ்நிலையில் அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை சமூகத்தின் பேரால் தன் தோள் மீது சுமந்து கொண்ட தலைவனாக றவூப் ஹக்கீமே மிளிர்கிறார்.

எனவே, நாம் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டிய காலகட்டத்திலிருக்கிறோமென்பதுடன், சிலர் தங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலிருக்கும் நிலையில், சமூகப்பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படும் தலைமையாக குறித்த காலப்பகுதிக்குள் எதிரிகளும் இன்றைய சூழ்நிலையில், இவரின் முன்னெடுப்புகள் சரி தான் என்று நினைக்குமளவுக்குச் சிறப்பாக தனது பணிகளை முன்னெடுத்துச்செல்லும் தலைவராக றவூப் ஹக்கீம் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

சமூகம் நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது தான் சிறந்த தலைவனை அடையாளங்கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே தான் தற்போதைய சூழ்நிலையில் றவூப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்பு மிகக்காத்திரமாக இருப்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.

எனவே, இன்றைய நிலையை விட நாளைய நிலை எவ்வாறு அமையுமோ என்ற அச்சத்திலிருக்கும் சமூகம் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு எமது இருப்பை உறுதிப்படுத்த பாடுபட முன்வர வேண்டுமென்பதுடன், ஏனையவர்களும் அதிகாரங்கள் தொடர்பாக மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டு தற்போது ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையைச் சீரழிக்காது சமூகப்பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டுமென இக்காலகட்டத்தில் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -