கிண்ணியா நகர சபையினால் நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட இருந்த அங்காடி வியாபாரம் பாதுகாப்பு நலன் கருதி சபையின் ஏகமானதாக தடை செய்யப்பட்டிருந்தது இதனை மீறி அங்காடி வியாபாரம் இடம் பெற்றுள்ளதுடன் பண மோசடியும் இடம் பெற்றுள்ளது இதனை குழு அமைத்து உரிய அதிகாரிகளை அழைத்து விசாரனை செய்யுங்கள் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் சபை தவிசாளருக்கு கோரிக்கை விடுத்தார்.
கிண்ணியா நகர சபையின் விசேட சபை அமர்வு இன்று (01) திங்கட் கிழமை நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
கடந்த இறுதி சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரனையை தொடர்ந்து அதனை மீறி செயற்படுவது சபை சட்ட நடவடிக்கைகளுக்கு முரணானது இதனால் தாங்கள் சபையில் கௌரவ உறுப்பினர்களாக இருந்து எவ்வித பலனும் இல்லை சட்டத்தை மீறி செயற்படுவது எமக்கு கவலை அளிக்கிறது .
அங்காடி வியாபாரம் முற்றாக தடை செய்யப்பட்டும் சபையின் ஏகமான பிரேரனை நிறைவேற்றம் தொடர்ந்தும் இருந்தும் கூட அதனை மீறி வியாபாரத்துக்கு அனுமதியளித்து உரிய பணம் அறவிடும் அதிகாரிகள் ஊடாக பணம் அறவிடப்பட்டிருக்கிறது இதில் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதை அறிவோம்.
இதனை உரிய அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை துரிதப்படுத்தி சபையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
வீணாண நடவடிக்கைகள் ஊடாக சபை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துங்கள் .
எதிர்கால அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு தங்களது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் இதற்காக சக உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டும் செயற்படவுள்ளோம்.
கொழும்பில் உள்ள அமைச்சர்களை சந்தித்தாவது சபையின் வளர்ச்சிக்கு ஒரு போதும் இணக்கப்பாட்டுக்கு நீங்கள் செயற்படாமல் இருப்பது எங்கள் மீது கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே தவிசாளர் என்கின்ற நடிபங்கினை கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட இறைவனே வேண்டுகிறேன் என மேலும் உறுதிப்படத் தெரிவித்தார்.