கல்முனையில் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்


பாறுக் ஷிஹான்-
ல்முனை இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் அமரர் ரெட்ணம் ரெட்ணத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச வைத்திய முகாம் வெள்ளிக்கிழமை(19) காலை 9 மணி முதல் கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய பல் தேவை கட்டிடத்தில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரனின் வழிநடத்தலில் நடைபெற்றது.
பிரதேச மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கோடு நோய்க்காரணிகளை கண்டறியும் முகமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இந்த வைத்திய முகாம் இடம்பெற்று வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைத்திய முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளையும் ஆலோசனையும் பெற்று வருவதாகத் ஏற்பாட்டாளர்கள் எமக்குத் தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -