திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளான்மையில் அரக்கொட்டியான் நோய்த்தாக்கம் அதிகரித்து பரவி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பகுதியில் பேராற்றுவெளி,பொட்டம்காடு,பேராறு,வான்எல போன்ற பகுதிகளில் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளான்மைச் செய்கையிலே இவ்வாறு அரக்கொட்டின் நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாகவும்,இதனால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் விவசாயிகாள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அறுவடைக்காக ஆயத்தமாகி வரும் நிலையில் அரக்கொட்டியானின் தாக்கம் வேளாண்மையை அழுக வைத்து நெல் இல்லாமல் ஆக்கிவிடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தில் அரக்கொட்டியானுக்கு எந்தவிதான எண்ணெய்களும் செல்வாக்கு செலுத்துவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வியத்தில் விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

