தேசிய வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோக்கு நாளை வரை விளக்கமறியல்
இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தண்டனை சட்டக்கோவைக்கு ஏற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றம் என தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.