திருகோணமலை இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் "ஊழியர்களின் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்தக் கோரி" திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று (3) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஊழியர்கள் ஈடுட்டார்கள்.
ஓய்வூதியக் கொடுப்பனவு வழுக்களை திருத்துக ஏற்றுக் கொள்ளக்தக்கதொரு ஓய்வூதியத்தினை ஏற்படுத்து, மற்றும் இல்லாமல் ஆக்கப்பட்ட ஒய்வூதியத்தினை திருத்து போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதன் போது துண்டுப் பிரசுரங்களும் பொது மக்களுக்கு ஊழியர்களினால் விநியோகித்தார்கள்.