வத்தளையில் பூரணத்துவமான தமிழ்ப் பாடசாலை

அஸ்ரப் ஏ சமத்-
த்தளையில் பூரணத்துவமான தமிழ்ப் பாடசாலை ஒன்று அமைய வேன்டும் என்ற வத்தளை வாழ் தமிழ் மக்களின் நீண்டகாலக் கனவு இன்று(12-07-2019) நனவாகியது.
இந்தப் பாடசாலையின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தவாக அல்லது பாடசாலையின் ஸ்தாபகராகப் போற்றப்பட வேண்டியவர் வர்த்தகர் மாணிக்கவாசகம் என்பராவாவா.; வத்தளை ஹ_னுப்பிட்டியில் புகையிரத நிலைய வீதியில் அமைந்திருந்த அருண்
சாந்தி நிவாஸ என்ற ஆதரவற்ற சிறுவர்களுக்கான நிலையத்தினை அருன்
மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரியாக இன்று ஆரம்பித்து வைக்கப்ப்பட்டது. இக் கல்லுரியி தற்பொழுது கொழும்பு இந்துக் கல்லூரியின் இணை கல்லூரியகாகவே இயங்கும்.
இக் கல்லூரிக்காக 4 மாடிகளைக் கொண்ட வகுப்பறைக்கட்டிடத்திற்காக அமைச்சர் மனோ கனேசனின் அமைச்சினால் 8 கோடி ருபா நிதி ஒதுக்கப்டப்டடு முதற்கட்டமாக 3 கோடி ருபா நிதி ஒதுக்கப்பட்டு இன்று அமைச்சர் ;மனோ கனேசன், கல்வியமைசசர் அகிலவிராஜ் காரியவாசம், அமைச்சர் ஜோன் அமரதுங்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காணியை அன்பளிப்புச் செய்த கொடை வல்லள் மாணிக்கவாசகம் ஆகியோர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்தனா.; அத்துடன்
பாடசாலையின் நினைவுக்கல்லையும் திரை நீக்கம் செய்தனர். ஏற்கனவே இங்கு 65 மாணவர்கள் 1ஆம் 2ஆண்டில் கல்வி கற்று வருகின்றமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட இக் காணி மற்றும் 5 மேற்பட்ட
வகுப்பறைகள் கூட்ட மண்டபம் கொண்ட கட்டிடங்களைக் கொண்ட இச் சொத்தினை மாணிக்கவாசகரின் அகால மரணமடைந்த தனது மகன் ஞாபகார்த்தமாக “; அருன் மாணிக்கவாசகம் இந்துக் தேசிய கல்லூரி” என பெயரிட்டு இதன் காணியை ஜனாதிபதியிடம் நன்கொடையாக கையளித்து பினனர்; ஜனாதிபதி ஊடகாக கல்வியமைச்சுக்கு இக் காணிகள் பகிரப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றில் அதுவும் மேல் மாகாணத்தில் தேசிய பாடசாலை ஒன்று அமைக்க்பபட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும். கல்வியமைச்சின் மும்மொழி, மூவினங்களையும் கொண்ட பாடசாலைகளே ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையிருந்தும் அச் சட்டத்தினை உடைத்து அமைச்சர் மனேவின் விடா முயற்சியினால் இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய கல்வியமைச்சர் அகில விராஜ் கூறுகையில்
ஏற்கனவே கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வீ. இராதக்கிருஸ்னன் ஊடக மாணிக்கவாசகர் என்னை சந்தித்து இக்கல்லூரியினை பாரமெடுத்து அகால மரணமடைந்த தனது மகனின் பெயரில்; ஒரு தேசிய கல்லூரியாக இக் கல்லூரியை மாற்றும்படி கோரிக்கைவிடுத்திருந்தார். கல்வியமைச்சுக்கு
சட்டப்பிரச்சினைகள் இருந்தன. தனியார் காணி பாடசாலைகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவரமுடியாது. புதிய பாடசாலைகளை மாகாண கல்வியமைச்சினாலேயே ஆரம்பிக்க முடியும். என்ற சட்ட திட்டங்கள் இருந்தன. இவ் விடயத்தினை
அமைச்சர் மனோ கனேசன் இப் பாடசாலையை பெயர் மற்றும் சட்ட திட்டங்கள் கொண்ட ஒர் அமைச்சரவைப்பத்திரம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு கல்வியமைச்சுக்கு அனுமதி பெற்றுக் கொண்டிருந்தார். இக் கல்லூரி கொழும்பு விவேகானந்த தேசிய பாடசாலையின் நிர்வாகத்தின் கீழ் ஓர் இனைப்புக் கல்லூரியாகவே இது இயங்கும்.
இன்று அவரது அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வியமைச்சினால் உரிய
அபிவிருத்திகள் செய்து கொடுக்கப்படும். வத்தளையில் அதுவும் மெயின்
வீதியில் இங்கு 1 பேர்ச் சாணி 15 இலட்சம் ருபா பெறுமதி
விற்கப்படுகின்றது. ஆனால் 100 பேர்ச்சுக்கும் மேற்பட்ட காணியை கல்விச்
சமுகத்திற்காக மாணிக்கவாசகம் பாடசாலைக் கல்விக்காக கையளித்தமையிட்டு இந்த அரசாங்கமும் கல்வியமைச்சர் என்ற ரீதியில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்;.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -